பெரும் பசிபிக் குப்பை மண்டலம்4c m52P n
பெரும் பசிபிக் குப்பை மண்டலம் (Great Pacific garbage patch, அல்லது Pacific trash vortex), என்பது, வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்த வடக்கு பசிபிக் சுழலோட்டத்தில் மாட்டியிருந்த சூழல் மாசடைதலை குறிக்கும்[1]. இம்மண்டலத்தில் நெகிழி துகள்கள், வேதிக் கழிவுகள், மற்றும் பல்வேறு குப்பை கலந்துகொண்டுள்ளன. ஏறத்தாழ மேற்கு 135°இலிருந்து 155° வரை, வடக்கு 35°இலிருந்து 42°வரை இப்பகுதியை காணலாம்.[2]
பசிபிக் பெருங்கடலின் எல்லைகளில் இருக்கும் நாடுகளிலிருந்தும், கப்பல்களிலிருந்தும் வெளிவருகிற சூழல் மாசடைகள் கடல் நீரோட்டங்களில் மாட்டி இப்பகுதியில் குவிக்கப்பட்டன என்று சூழலியலாளர்கள் நினைக்கின்றனர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dautel, Susan L. "Transoceanic Trash: International and United States Strategies for the Great Pacific Garbage Patch," 3 Golden Gate U. Envtl. L.J. 181 (2009)
- ↑ Moore, Charles (November 2003). Across the Pacific Ocean, plastics, plastics, everywhere. Natural History Magazine. http://www.mindfully.org/Plastic/Ocean/Moore-Trashed-PacificNov03.htm